Overshadowing
Overshadow இது நம்ம உபயோகிக்குற ஒரு வார்த்தைதான். ஆனால் அதை அனுபவிக்குற ஒருத்தருக்குத்தான் அதோட உண்மையான வலி தெரியும். அதுக்கு உதாரணம் கொஞ்ச நாள் முன்னாடி ராகுல் டிராவிட் அப்பா குடுத்த பேட்டி. அதை கேட்டப்பதான் தெரிஞ்சுது அதை அனுபவிக்குறவங்க மட்டுமில்லாம அவங்கள சுத்தி இருக்குறவங்களும் எவ்வளவு வருத்தப்படுறாங்கன்னு. இதை கொஞ்சம் நுணுக்கமா அலசிப்பார்த்ததுல தெரிஞ்ச உண்மை கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், அது எல்லா துறையிலயும் நடக்குற ஒரு சாதாரண நிகழ்வுன்னு தெரியும்.
சரி. ராகுல் டிராவிட் கதை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். சச்சின் புகழ் திராவிடோட உழைப்பு, திறமைய கொஞ்சம் புகழ் வெளிச்சத்துக்கு வராம போய்டுச்சு. யோசிச்சு பார்த்தா அதுக்கு பல காரணங்கள் இருக்கும். டிராவிட் எப்பவுமே ஊடகங்கள் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தார். அதுகூட ஒரு காரணமா இருக்கலாம். என்னை பொறுத்த அளவுல டிராவிட் கூட இதுக்கு ஒரு காரணம். யு நீட் டு செல் யூஸ்ர்செல்ப் (You need to sell yourself), அதை அவர் செய்யலன்னு தான் தோணுது.
இதை ஏன் நான் எல்லா துறையிலயும் நடக்குற ஒண்ணுனு சொன்னேன்னா, உதாரணத்துக்கு கங்கை அமரன் ஒரு பலி ஆடுன்னு சொல்லலாம். 200 படங்களுக்கு இசை அமைச்சும் இன்னைக்கும் பல பேர் அது இளையராஜா இசை அமைச்சதா பலர் நினைச்சுட்டு இருக்காங்க (சில வருடங்கள் முன்னாடி வரைக்கும் நான் கூட அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன்:(). இன்னும் சொல்லப்போனா இளையராஜா காலத்துல இருந்த சந்த்ரபோஸ், சிற்பி, சங்கர் - கணேஷ் மாதிரி நிறைய பேரோட பாடல்கள்ல, இளையராஜாதான் செய்தார்னு நினைச்சுட்டு இருக்கோம்.
இன்னும் சொல்லப்போனா, நமக்கு தெரிஞ்ச பாடலாசிரியர்கள் யாரு? கண்ணதாசன், அவருக்கு பிறகு வாலி, வாலிய தொடர்ந்து வைரமுத்து. இவங்க இல்லாம எத்தனை நல்ல பாடலாசிரியர்கள் இருக்காங்க? பிறைசூடன், முத்துலிங்கம் மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்குறாங்க. இதழில் கதை எழுதும் பாட்டை நிறையப்பேர் வைரமுத்து எழுதுனதாத்தான் நெனச்சுட்டு இருக்காங்க. ஆனால் அதை எழுதினது முத்துலிங்கம் :).
ராகுல் டிராவிட் நிலைமைய விட மேல சொன்னது ரொம்ப கொடுமையான நிலைமை. இது ஒவ்வொரு அலுவலகங்கள்ல கூட நடந்துட்டு இருக்குற ஒண்ணுதான். என் கண் முன்னாடியே இன்னமும் பலர் இருக்குறத என் அலுவலகத்துலையே பார்த்துட்டுதான் இருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஒரு சில காரணங்கள் இது நடக்குறதுக்கு,
- அவங்க வேலைப்பளு இதுல எல்லாம் அவங்க கவனம் போகாம இருந்துருக்கலாம். இது எல்லாம் நமக்கு முக்கியமில்லன்னுகூட நினச்சுருக்கலாம். எனக்கு தெரிஞ்சு இதுதான் பல பிரபலங்களோட வாழ்கையில விளையாடி இருக்கும்.
- சிலரோட கூச்ச சுபாவம், ஊடகங்கள விட்டு ரொம்ப விலகி இருக்குறது, தன்னை சரியா விளமபரபடுத்த தெரியாததுனால இருக்கும்.
- அதே துறைய சார்ந்த இன்னொருத்தர் இன்னும் சிறப்பா செயல்பட்டுடு இருக்கலாம். அவருடைய புகழ் நம்மை அமுக்கிடலாம். அப்படியே தெரிஞ்சாலும் மக்கள் அதை பெருசா எடுத்துக்காம இருக்கலாம். டிராவிட் இதுக்கு உதாரணம். அப்படியே இன்னொருத்தரை விட நாம சிறப்பா செயல்பட்டாக்கூட, சில சமயங்கள்ல ஒருத்தரை ஏத்துகிட்ட நம்மால இன்னொருத்தரை அந்த இடத்துல ஏத்துக்க முடியாம போய்டும்.
இன்னும் பேசுவோம், புரிஞ்சுக்குவோம்.....
Comments
Post a Comment