Posts

Showing posts from 2011

Overshadowing

Overshadow இது நம்ம உபயோகிக்குற ஒரு வார்த்தைதான். ஆனால் அதை அனுபவிக்குற ஒருத்தருக்குத்தான் அதோட உண்மையான வலி தெரியும். அதுக்கு உதாரணம் கொஞ்ச நாள் முன்னாடி ராகுல் டிராவிட் அப்பா குடுத்த பேட்டி. அதை கேட்டப்பதான் தெரிஞ்சுது அதை அனுபவிக்குறவங்க மட்டுமில்லாம அவங்கள சுத்தி இருக்குறவங்களும் எவ்வளவு வருத்தப்படுறாங்கன்னு. இதை கொஞ்சம் நுணுக்கமா அலசிப்பார்த்ததுல தெரிஞ்ச உண்மை கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், அது எல்லா துறையிலயும் நடக்குற ஒரு சாதாரண நிகழ்வுன்னு தெரியும். சரி. ராகுல் டிராவிட் கதை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். சச்சின் புகழ் திராவிடோட உழைப்பு, திறமைய கொஞ்சம் புகழ் வெளிச்சத்துக்கு வராம போய்டுச்சு. யோசிச்சு பார்த்தா அதுக்கு பல காரணங்கள் இருக்கும். டிராவிட் எப்பவுமே ஊடகங்கள் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தார். அதுகூட ஒரு காரணமா இருக்கலாம். என்னை பொறுத்த அளவுல டிராவிட் கூட இதுக்கு ஒரு காரணம். யு நீட் டு செல் யூஸ்ர்செல்ப் (You need to sell yourself), அதை அவர் செய்யலன்னு தான் தோணுது. இதை ஏன் நான் எல்லா துறையிலயும் நடக்குற ஒண்ணுனு சொன்னேன்னா, உதாரணத்துக்கு...

என் ரஷ்யப் பயணம்....

இதே மார்ச் மாசம் போன வருஷம் (2010), ரஷ்யாவுக்கு ( St. Petersburg ) வேலை சம்மந்தமா போக வேண்டி வந்தது. ஆனால், அது அவ்வளவு சுலபமா இல்லை. நல்ல விமானப் பயணம். நன்றி, Qatar Airways (கால் வைக்க இடம், நல்ல சாப்பாடு, அருமையான தமிழ் படம் நாடோடிகள்.). Moscowல சனிக்கிழமை சரியாய் 12:45க்கு இறங்குனோம், அங்க ஆரம்பிச்சுது என் கிரகம். Immigration காக வரிசையில நின்னுட்டு இருந்தோம். நான் நாலாவது ஆளு வரிசையில (முன்னாடி மூணு செம கட்டை நின்னுட்டு இருந்துது). கடவுள் ரொம்ப நேரம் ஒருத்தர சந்தோஷமா வெச்சுருக்க மாட்டார் இல்லை? அவங்க எல்லாம் வேக வேகமா போய்ட்டாங்க. நம்ம போனோம்.  அங்க உட்க்கார்ந்து இருந்ததும் அழகான பொண்ணுதான். பாஸ்போர்ட்டை கொடுத்தேன். என் முகத்தை சரி பார்த்துச்சு. Machine ல, பாஸ்போர்ட்ஐ தேச்சுது. சிகப்பு LED எரிஞ்சுது. ரெண்டு, மூணுன்னு எல்லா தடவையும் சிகப்பு  LED தான் எரிஞ்சுது. மனசுக்குள்ள மணி அடிச்சுது, பிரணாப் உனக்கு அப்புனு. பக்கத்துல உக்காந்துருந்த அம்மணிகிட்ட எதோ கேட்டுச்சு, அது உதட்டை பிதுக்குச்சி. தாம் தூம் படம் எல்லாம் நியாபகம...

சடங்குகளும் சம்பிரதாயங்களும்....

நம்மளோட அன்றாட வாழ்க்கையில கலந்து போன சில சம்பிரதாயங்களும் சடங்குகளும் நிறைய உண்டு. அதுக்கு உண்டான காரணத்தை உணர்ந்து செய்யரோமான்னு யோசிச்சு பார்த்தா நிச்சயமா இல்லை. காலப்போக்குல இது எல்லாம் ஒரு வழக்கமாகிடுச்சே தவிர அதுக்கு உண்டான காரணங்களை மறந்து போய்ட்டோம். உதாரணத்துக்கு நம்ம நாட்டுல அதுவும் குறிப்பா தமிழ் சமூகத்துல மேடையில ஒருத்தருக்கு மரியாதை செய்யனும்னா சால்வை போர்த்துற வழக்கம் இருக்கு. இது ஒரு வித்தியாசமான ஒரு விஷயமா எனக்கு ரொம்ப நாள் தோணிட்டு இருந்தது. அப்புறம் தெரிஞ்சது, நம்ம அரசர்கள் அந்த காலத்துல புலவர்களுக்கு பட்டுல செய்யப்பட்ட துணியை பரிசா குடுத்துட்டு வந்த வழக்கம் தான் இப்போ நாம் விடாம பிடிச்சுட்டு இருக்கோம்னு. அப்போ நம்ம அரசர்கள் எதுக்கு குடுத்தாங்கன்னா, புலவர்கள் அவங்க பாட்டுகள் எழுதின பனையோலைகளை இந்த துணியில வெச்சு சுத்தி பாதுகாப்பா வைக்க உதவியா இருக்க அரசர்கள் குடுத்தாங்கன்னு.  அதுவும் சிகப்பு துணி தான் இருக்கும், ஏன்னா பூச்சிகள் சிகப்பு துணிக்கு பக்கம் வராது. இதுல கூத்து என்னன்னா தன்னை ஒரு சிறந்த பகுத்தறிவு வாதிகள...

Workaround Solutions

IT துறையில ஒரு பேச்சு வழக்கு உண்டு "Workaround Solutions"ன்னு. இதை எப்ப செய்வோம்ன்னா எதாச்சும் ஒரு defectஐ வாடிக்கையாளர் உடனே சரி செய்து தர சொன்னா தற்காலிகமா அடிச்சு பிடிச்சு அங்க அங்க ஒரு patch போட்டு தற்காலிகமா தருவோம். என்னடா இதை எதுக்கு சொல்றேன்னு பார்க்குறீங்களா? இந்த பழக்கம் எங்க இருந்து வந்ததுன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்தா இது நம்ம இந்தியர்களோட ரத்தத்துல ஊறி இருக்குற ஒரு விஷயம் தான். Typically, "IT HAPPENS ONLY IN INDIA". உதாரணாமா நம்ம ஊருல மின்வெட்டு அதிகம். இதுக்கு சரியான தீர்வு என்னவா இருக்க முடியும்? மின் உற்பத்திய அதிகப்படுதுறது, ஆனால் நம்ம inverter, power generator ன்னு, தற்காலிகமா ஒரு யுக்தி செய்வோமே தவற மின் உற்பத்திய சரி செய்ய மாட்டோம். சாலையில  குண்டு, குழி இருந்தா என்ன பன்னுவோம்னா வாகனங்களோட கிரௌண்ட் லெவல் அதிகப்படுத்துவோமே தவிர சாலைய சரி படுத்த மாட்டோம். டிராபிக் சரி செய்ய சாலைய அகலபடுத்துவோமே தவிர public transportation systemஐ சரி செய்ய மாட்டோம். இப்படி நெறைய சொல்லிகிட்டே போகலாம். இதுல இன்னும் சோகமான ஒன்னு என்னன்னா...

இனி...

அர்த்தம் தொடரும் ....