நம் கல்விமுறை - அன்றும், இன்றும்!!!
நம்முடைய கல்விமுறைன்னு அதாவது இந்திய கல்விமுறைனா அது குருகுல கல்விதான் . இதை நான் எதும் புதுசா கண்டுபிடிச்சு எல்லாம் சொல்லல . இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான் . ஆனால் அங்க என்ன எல்லாம் சொல்லிதந்தாங்ககுறது நம்ம எல்லாருக்கும் தெரியுமான்னு கேட்டா அது ஒரு கேள்விக்குறி ??? இதை பத்தி நான் ஏன் பேசுறேங்குறது கீழ படிக்குறப்ப புரியும் . சரி . குருகுல கல்வில என்ன எல்லாம் சொல்லி தந்தாங்க பாப்போம் ? ஒழுக்கம் – காலையில சீக்கிரம் எழுந்திருக்கிறதுல இருந்து தன் வேலைய தானே பார்துக்குறது , குருவின் வீட்டு வேலைகள் , விவசாயம் வரைக்கும் . அறம் – எது சரி ? எது தவறு ? வாழ்வுமுறை , சமூக அக்கறை , தனிமனித ஒழுக்கம் , எல்லாம் . யோகா – தியானம் மனதிற்கு , உடற்பயிற்சி உடம்பிற்கு . வேதங்கள் , புராணங்கள் , மந்திரங்கள் - இது நம்ம முன்னோர்களுடைய வாழ்வியல் முறை , அவங்க கடைபிடிச்ச தர்மம் , நாம அதுல இருந்து கதுக்கவேண்டிய பாடங்கள் மற்றும் நீதி போதனைகள் . அப்புறம் நம் அன்றாட வாழ்க்கையில் ஜபிக்க வேண்டிய சில மந்த...