என் ரஷ்யப் பயணம்....
இதே மார்ச் மாசம் போன வருஷம் (2010), ரஷ்யாவுக்கு ( St. Petersburg ) வேலை சம்மந்தமா போக வேண்டி வந்தது. ஆனால், அது அவ்வளவு சுலபமா இல்லை. நல்ல விமானப் பயணம். நன்றி, Qatar Airways (கால் வைக்க இடம், நல்ல சாப்பாடு, அருமையான தமிழ் படம் நாடோடிகள்.). Moscowல சனிக்கிழமை சரியாய் 12:45க்கு இறங்குனோம், அங்க ஆரம்பிச்சுது என் கிரகம். Immigration காக வரிசையில நின்னுட்டு இருந்தோம். நான் நாலாவது ஆளு வரிசையில (முன்னாடி மூணு செம கட்டை நின்னுட்டு இருந்துது). கடவுள் ரொம்ப நேரம் ஒருத்தர சந்தோஷமா வெச்சுருக்க மாட்டார் இல்லை? அவங்க எல்லாம் வேக வேகமா போய்ட்டாங்க. நம்ம போனோம். அங்க உட்க்கார்ந்து இருந்ததும் அழகான பொண்ணுதான். பாஸ்போர்ட்டை கொடுத்தேன். என் முகத்தை சரி பார்த்துச்சு. Machine ல, பாஸ்போர்ட்ஐ தேச்சுது. சிகப்பு LED எரிஞ்சுது. ரெண்டு, மூணுன்னு எல்லா தடவையும் சிகப்பு LED தான் எரிஞ்சுது. மனசுக்குள்ள மணி அடிச்சுது, பிரணாப் உனக்கு அப்புனு. பக்கத்துல உக்காந்துருந்த அம்மணிகிட்ட எதோ கேட்டுச்சு, அது உதட்டை பிதுக்குச்சி. தாம் தூம் படம் எல்லாம் நியாபகம...