சடங்குகளும் சம்பிரதாயங்களும்....
நம்மளோட அன்றாட வாழ்க்கையில கலந்து போன சில சம்பிரதாயங்களும் சடங்குகளும் நிறைய உண்டு. அதுக்கு உண்டான காரணத்தை உணர்ந்து செய்யரோமான்னு யோசிச்சு பார்த்தா நிச்சயமா இல்லை. காலப்போக்குல இது எல்லாம் ஒரு வழக்கமாகிடுச்சே தவிர அதுக்கு உண்டான காரணங்களை மறந்து போய்ட்டோம்.
உதாரணத்துக்கு நம்ம நாட்டுல அதுவும் குறிப்பா தமிழ் சமூகத்துல மேடையில ஒருத்தருக்கு மரியாதை செய்யனும்னா சால்வை போர்த்துற வழக்கம் இருக்கு. இது ஒரு வித்தியாசமான ஒரு விஷயமா எனக்கு ரொம்ப நாள் தோணிட்டு இருந்தது. அப்புறம் தெரிஞ்சது, நம்ம அரசர்கள் அந்த காலத்துல புலவர்களுக்கு பட்டுல செய்யப்பட்ட துணியை பரிசா குடுத்துட்டு வந்த வழக்கம் தான் இப்போ நாம் விடாம பிடிச்சுட்டு இருக்கோம்னு. அப்போ நம்ம அரசர்கள் எதுக்கு குடுத்தாங்கன்னா, புலவர்கள் அவங்க பாட்டுகள் எழுதின பனையோலைகளை இந்த துணியில வெச்சு சுத்தி பாதுகாப்பா வைக்க உதவியா இருக்க அரசர்கள் குடுத்தாங்கன்னு. அதுவும் சிகப்பு துணி தான் இருக்கும், ஏன்னா பூச்சிகள் சிகப்பு துணிக்கு பக்கம் வராது.
இதுல கூத்து என்னன்னா தன்னை ஒரு சிறந்த பகுத்தறிவு வாதிகளாக நெனச்சுட்டு இருக்குற பலரும் இதை ஒரு மேடை நாகரிகமா செய்துட்டு வர்றதுதான். அது யாரு என்னங்குற ஆராய்ச்சிக்குள்ள போக வேணாம். அது ஊராரிஞ்ச விஷயம் தான்.
அப்புறம் இன்னும் ஒரு சுவாரஸ்யமான ஒரு தகவல் என்னன்னா நம்ம போடுறோமே பிள்ளையார் சுழி, அது வேற எதுவும் இல்லை, ஓலையில எழுதுறதுக்கு முன்னாடி ஓலை நல்லா இருக்கான்னு சரி பார்க்குறதுக்கு நம்ம ஆளுங்க வேகமா ஒரு வட்டம் அதுக்கு கிழ ஒரு கோடு போட்டு பார்ப்பாங்க. கிழிஞ்சா தூக்கி போட்டுட்டு வேற ஓலை எடுத்துப்பாங்க, இல்லேன்னா அதுல எழுதுவாங்க. அதைத்தான் பிள்ளையார் வரைக்கும் நம்ம லிங்க் அடிச்சு நம்ம கற்பனை குதிரைக்கு வேலை குடுத்துட்டோம். இது மாதிரி நிறைய சொல்லிட்டே போகலாம்.
இப்போதைய உடனடி தேவை நம்ம பழக்க வழக்கங்களை தீவிரமா கண்காணிச்சு அதுக்கான ஆணிவேரை பிடிச்சோம்னா இன்னும் நெறைய தகவல்களையும், பழந்தழிலரோட வாழ்க்கை முறைய இன்னும் ஆழமா புரிஞ்சுக்குற வாய்ப்பும் கிடைக்கும். முக்கியமா தேவையான சடங்குகளை மட்டும் வெச்சுக்கிட்டு மற்றதை அகற்றலாம். அதை விட முக்கியம் தங்களை பகுதறிவுவதிகளா கட்டிக்கிட்டு ஏமாத்தி வாக்குகள வாங்குற கூட்டத்தை அடையாளம் காட்டுன மாதிரியும் இருக்கும். என்ன நான் சொல்றது?
இன்னும் பேசுவோம்!!!
appadieya .. araignan kayiru, poonai kurukkala pogatathu, 6 maniku mela nail vetta koodathu ithu ellathukkum solliudpa... Part -2 podu
ReplyDeletede guna..atha nan solraen...
ReplyDelete