என் ரஷ்யப் பயணம்....

இதே மார்ச் மாசம் போன வருஷம் (2010), ரஷ்யாவுக்கு (St. Petersburg) வேலை சம்மந்தமா போக வேண்டி வந்தது. ஆனால், அது அவ்வளவு சுலபமா இல்லை. நல்ல விமானப் பயணம். நன்றி, Qatar Airways (கால் வைக்க இடம், நல்ல சாப்பாடு, அருமையான தமிழ் படம் நாடோடிகள்.).

Moscowல சனிக்கிழமை சரியாய் 12:45க்கு இறங்குனோம், அங்க ஆரம்பிச்சுது என் கிரகம். Immigrationகாக வரிசையில நின்னுட்டு இருந்தோம். நான் நாலாவது ஆளு வரிசையில (முன்னாடி மூணு செம கட்டை நின்னுட்டு இருந்துது). கடவுள் ரொம்ப நேரம் ஒருத்தர சந்தோஷமா வெச்சுருக்க மாட்டார் இல்லை? அவங்க எல்லாம் வேக வேகமா போய்ட்டாங்க. நம்ம போனோம்.  அங்க உட்க்கார்ந்து இருந்ததும் அழகான பொண்ணுதான்.

பாஸ்போர்ட்டை கொடுத்தேன். என் முகத்தை சரி பார்த்துச்சு. Machineல, பாஸ்போர்ட்ஐ தேச்சுது. சிகப்பு LED எரிஞ்சுது. ரெண்டு, மூணுன்னு எல்லா தடவையும் சிகப்பு LEDதான் எரிஞ்சுது. மனசுக்குள்ள மணி அடிச்சுது, பிரணாப் உனக்கு அப்புனு. பக்கத்துல உக்காந்துருந்த அம்மணிகிட்ட எதோ கேட்டுச்சு, அது உதட்டை பிதுக்குச்சி. தாம் தூம் படம் எல்லாம் நியாபகம் வந்துச்சு. அப்புறம் எதிர்தாப்புல இருந்த அறைக்குள்ள போச்சு அந்த பொண்ணு, ரெண்டு நிமிஷம்னு சொல்லிட்டு. வந்துச்சு 15நிமிஷம் கழிச்சு. Follow meன்னு, அந்த அறைக்குள்ள போய் நம்ம சமாச்சரங்கள எல்லாம் அங்க இருந்த ஒரு பொம்பளைகிட்ட குடுத்துட்டு அது அதோட வேலைய பார்க்க போய்டுச்சு.

5 , 10, 15நிமிஷம் ஆச்சு. யாரும் என்ன கண்டுகிட்ட மாதிரி தெரியல. சரின்னு, எட்டி பார்த்தேன். உடனே உள்ள இருந்த பொம்பள 5நிமிஷம்னு சொல்லிச்சு. ஆனால் திரும்பவும் 10நிமிஷம் எந்த அறிகுறியும் தெரியல. அப்புறம் அந்த பொம்பள கடைசியா வெளியில என்னோட பாஸ்போர்ட் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துச்சு. Follow meன்னு, liftல கூட்டிட்டு கீழ போச்சு. திரும்பவும் அங்க ஒரு அறை முன்னாடி நிக்க வெச்சுட்டு அந்த பொம்பளை மட்டும் உள்ள போச்சு.

திரும்பவும் 10நிமிஷம் ஒன்னும் நடக்குற மாதிரி தெரியல. அனால் நிலைமை மோசமாகிட்டு இருக்கோன்னு தோணிச்சு. ஏன்னா, உள்ள கொஞ்சம் எட்டி பார்த்தப்பதான் தெரிஞ்சுது அந்த அறைதான் அந்த விமான நிலையம் முழுக்க இருக்குற CCTVய கண்காணிக்குற இடம்னு. கொஞ்சம் வியர்க்க ஆரம்பிச்சுது. இடது பக்கம் ஒரு 200மீட்டர் தூரத்துல ஒரு காவல் துறை அதிகாரி நடந்து வந்துட்டு இருந்தார் பின்னாடி ஒரு ஆளோட. கிட்ட வர வர தெரிஞ்சுது ரெண்டு பேர் கையும் விலங்கு போட்டு இருந்துது. பார்த்த உடனே எனக்கு trouser நனைஞ்சு போச்சு. ரஷ்யன் லட்டிக்கு நம்ம பின்புறத்த தயார் பண்ணிக்க வேண்டியதுதான்னு தோணிச்சு.

ஆனால் அதுக்கு அப்புறம் அப்படியே அவன கூட்டிட்டு அந்த அறைக்குள்ள வந்து உள்ள இன்னொரு கதவ திறந்து அந்த ஆளை ஒரு உதை விட்டாரு பாருங்க. எனக்கு கண்ணு முழி எல்லாம் பிதுங்கிக்கிட்டு வந்துடுச்சு. அவ்வளவுதான், onsiteஆவது ஒன்னாவது, என்ன திருப்பி அனுப்புனா போதும்டா சாமின்னு இருந்தது. கடைசியா உள்ள இருந்து இன்னொரு பொம்பள வெளியில வந்துச்சு என் பாஸ்போர்ட்டோட. எதுக்கு டபுள் என்ட்ரி விசா கேட்டிங்கனு கேட்டுச்சு. அட சாமி அது டபுள் என்ட்ரி விசாவாட அது? நல்ல வேலை உடனே சுதரிச்சுட்டு, ஒரு மீட்டிங் கான்செல் ஆகிடுச்சுனு சொன்னேன், சிரிச்சுட்டே "Have a Happy Stay in Russia"ன்னு சொல்லிச்சு பாருங்க, யப்பாட ஆளை விடுங்கடான்னு ஓடி வந்துட்டேன். ஒரு மணி நேரம். ரெண்டு நாள் மாதிரி இருந்துது....

இன்னும் பேசலாம்....

Comments

  1. If your Washer did not last everlastingly, but with correct maintenance you can expect yours to serve you a long time.so handle be a gentle!If you trouble for your appliance well and it still breaks, call you home appliance repair service. Your appliance could still be covered under warranty to a product recall.
    For further detail visit our locate please click here>>
    home appliances in tirunelveli
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம் கல்விமுறை - அன்றும், இன்றும்!!!

Workaround Solutions

சடங்குகளும் சம்பிரதாயங்களும்....