Workaround Solutions

IT துறையில ஒரு பேச்சு வழக்கு உண்டு "Workaround Solutions"ன்னு. இதை எப்ப செய்வோம்ன்னா எதாச்சும் ஒரு defectஐ வாடிக்கையாளர் உடனே சரி செய்து தர சொன்னா தற்காலிகமா அடிச்சு பிடிச்சு அங்க அங்க ஒரு patch போட்டு தற்காலிகமா தருவோம்.

என்னடா இதை எதுக்கு சொல்றேன்னு பார்க்குறீங்களா? இந்த பழக்கம் எங்க இருந்து வந்ததுன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்தா இது நம்ம இந்தியர்களோட ரத்தத்துல ஊறி இருக்குற ஒரு விஷயம் தான். Typically, "IT HAPPENS ONLY IN INDIA".

உதாரணாமா நம்ம ஊருல மின்வெட்டு அதிகம். இதுக்கு சரியான தீர்வு என்னவா இருக்க முடியும்? மின் உற்பத்திய அதிகப்படுதுறது, ஆனால் நம்ம inverter, power generator ன்னு, தற்காலிகமா ஒரு யுக்தி செய்வோமே தவற மின் உற்பத்திய சரி செய்ய மாட்டோம். சாலையில  குண்டு, குழி இருந்தா என்ன பன்னுவோம்னா வாகனங்களோட கிரௌண்ட் லெவல் அதிகப்படுத்துவோமே தவிர சாலைய சரி படுத்த மாட்டோம். டிராபிக் சரி செய்ய சாலைய அகலபடுத்துவோமே தவிர public transportation systemஐ சரி செய்ய மாட்டோம்.

இப்படி நெறைய சொல்லிகிட்டே போகலாம். இதுல இன்னும் சோகமான ஒன்னு என்னன்னா இந்த தற்காலிக யுக்திகள் எல்லாம் இப்போ நிரந்தர தீர்வகிட்டதுதான். இது நிச்சயம் "IT HAPPENS ONLY IN INDIA" வகைய சார்ந்தது தானே?

இன்னும் பேசுவோம்!!!

Comments

  1. இந்த work-arounds-ல இருக்க தப்பு கண்டு புடிக்க QC QC-னு ஒரு கும்பல் இருக்கே... அத பத்தி சொல்லவே இல்ல? :-)

    ReplyDelete
  2. Ha ha ha...! Avanga enna pannuvanga pavam.... Kudukkura fix sariya irukkanu parpanga.... Actual solution panrathu developers kaiyilathana irukku.....

    ReplyDelete
  3. Humm... Nall karutthu... appaadiyea innum sila examples narukku nu sollu

    ReplyDelete
  4. Hey Pranab,nalla eluthura da..mokkaiya ethum kirukkama useful stuffs...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம் கல்விமுறை - அன்றும், இன்றும்!!!

சடங்குகளும் சம்பிரதாயங்களும்....